சொந்த மண்ணில் தென்னாபிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி
சுற்றுலா தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இன்று (26) நடைபெற்ற இரண்டாவது போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து தனது முதல் இன்னிங்ஸில் 489 ஓட்டங்களை பெற்றிருந்தது.
செனுரான் முத்துசாமி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க வீரர் செனுரான் முத்துசாமி, இந்தியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ஒட்டங்களை மட்டுமே பெற்றது.
அதன்படி, இந்தியாவின் முதல் இன்னிங்ஸை விட 288 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை எடுத்திருந்தபோது தனது இன்னிங்ஸை நிறுத்த முடிவு செய்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று போட்டியை சமன் செய்ய 548 ஓட்டங்கள் தேவை என்ற இமாலய இலக்கைத் துரத்திய இந்திய அணியால் 140 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்படி, இந்தப் போட்டியில் 408 ஓட்டங்கள் என்ற வெற்றியைப் பெற்ற தென்னாப்பிரிக்கா, முந்தைய போட்டியிலும் வெற்றி பெற்றிருந்ததால் இந்தப் போட்டியிலும் குறிப்பிடத்தக்க வகையில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |