இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்
By pavan
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சுழற்பந்து ஜாம்பவானுமாகிய பிசன்சிங் பேடி தனது 77 வயதில் இன்று காலமானார்.
உலகின் தலைசிறந்த இடது கைசுழற்பந்து வீச்சாளர் என கருதப்பட்ட பிசன்பேடி 1967 முதல் 1979 வரை இந்தியாவிற்காக 67 டெஸ்ட் போட்டிகள் பத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார்.
இதில், 22 ஆட்டங்களுக்கு பிஷன் இந்திய அணியின் தலைவராக செயல்பட்டுள்ளார்.
ரசிகர்கள் இரங்கல்
67 டெஸ்ட்களில் ஆடியுள்ள பிஷன் சிங் 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 ஒருநாள் ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவருக்கு கடந்த 1970ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிஷன் சிங் பேடி இன்று காலமானார். அவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி