2026 ரி20 உலகக் கிண்ணத்தை தன்வசமாக்கியது இந்திய அணி!
ரி20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து இரண்டு முறை ரி20 உலக கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணாயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பவர் பிளே
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி, பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ஓட்டங்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் ஆறு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். முதல் ஆட்டமிழப்புக்கு இந்த ஜோடி 98 ஓட்டங்கள் சேர்த்தது.
இந்த கட்டத்தில் ஆட்டத்தின் 16-வது ஓவரில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. சாம்சன், இசான் கிசான், சூரியகுமார் யாதவ் என ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை குவித்தது.
நியூசிலாந்து படுதோல்வி
இதனால் 256 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 159 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் மூன்றாவது முறையாக ரி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் சாதனை படைத்தனர்.
இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 15 ஓட்டங்கள் மட்டுமெ கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |