ஒரே இரவில் இலட்சாதிபதி : கண்ணை மூடியதால் அடித்த அதிஷ்டம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கண்ணை மூடிக்கொண்டு எண்களை தேர்வு செய்த இந்தியருக்கு 17 இலட்சம் ரூபாய் ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளதுடன் அவர் பட்ட கடன்களுக்கும் தீர்வு கிடைத்ததுள்ளதால் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மனோஜ் பவ்சர் (42 வயது), எமிரேட்ஸ் டிராவில் பங்கேற்ற இவருக்கு 75, 000 திர்ஹம்களை பரிசாக கிடைத்துள்ளது.இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 17,00,987 ரூபாய் ஆகும்.
தூக்கமில்லாத இரவுகள்
கடந்த 16 ஆண்டுகளாக அபுதாயில் வசித்து வரும் இவர்தொழில்நுட்பவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். எமிரேட்ஸ் டிராவில் ஐந்து எண்களைப் பொருத்தி இந்த மெகா பரிசைப் பெற்றார்.
மனோஜ் பவ்சர் கடுமையான நிதி சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் இதனால் தூக்கமில்லாத இரவுகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடனை அடைக்க திட்டம்
இருப்பினும் தனது நண்பர்கள் மூலம் எமிரேட்ஸ் டிராவில் பங்கேற்று பரிசை வென்றுள்ளார். மனோஜ் இந்த டிராவில் கண்களை மூடிக்கொண்டு, தற்செயலாக எண்களைத் தேர்ந்தெடுத்தார். இதில் அதிர்ஷ்டத்தை எட்டிப்பிடித்த அவர் 75,000 திர்ஹம்களை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக சுமந்து வரும் கடனை அடைக்க திட்டமிட்டுள்ளார் மனோஜ் பவ்சர்.
மேலும் இருவருக்கு அடித்த அதிஷ்டம்
இதேபோல் மஹ்சூஸ் டிராவிலும் இரண்டு இந்தியர்கள் ஜாக்பொட் பரிசுகளை வென்று மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த ஷெரியன் மற்றும் பகவத், ஆகிய இருவரும் வாராந்திர டிரிபிள் 100 ரேஃபிள் டிராவில் பங்கேற்றனர். அவர்கள் இருவரும் தலா 100,000 திர்ஹம்களை வென்றுள்ளனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 22,66,178 ரூபாய் ஆகும்.
50 வயதான ஷெரியன், கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகின்றார். இவர் தீ மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்.
மற்றொரு வெற்றியாளரான 35 வயது பகவத், சிவில் பொறியியலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக குவைத்தில் வசித்து வருகின்றார்.