சேலையுடன் இந்தியப் பெண் செய்த செயல் - குவியும் பாராட்டுக்கள்!
India
Marathon
England
By Pakirathan
நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தை சேலையுடன் இந்தியப் பெண்ணொருவர் ஓடி முடித்துள்ளதுடன், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மதுஸ்மிதா ஜெனதாஸ் (Madhusmita Jena-Das) எனும் பெண்மணி சுமார் 5 மணி நேரத்தில் குறித்த ஓட்டத்தை ஓடி முடித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர் இங்கிலாந்தின் மென்செஸ்டரில் (Manchester) வசிப்பதுடன், இந்தியப் பாரம்பரியத்தைச் சிறந்த முறையில் வெளிக்காட்டியதாக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மதுஸ்மிதா ஜெனதாஸ் சேலையில் ஓடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, "இது மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ள செயல், இதனைக் காணும்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது" என பலரும் தமது பாராட்டுகளை தெரிவித்து அவரை உற்சாகம் ஊட்டி வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி