மாலைதீவிற்கு செக் வைத்த சீனா! நட்பு நாடு இந்தியாதான்.. பொங்கி எழுந்த எதிர்க்கட்சிகள்
மாலைதீவின் அதிபர் முகமது முய்ஜு சீனா பர்க்கம் சேர்ந்து இந்தியாவிற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
புவிசார் அரசியலில் மாலைதீவு இந்தியாவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. மாலைதீவு உடனான உறவை பலப்படுத்த, ஏராளமான அளவில் இந்தியா அங்கு முதலீடு செய்திருக்கிறது.
ஆனால் மாலைதீவிற்கு சீன ஆதரவாளர் முகமது முய்ஜு அதிபராக தெரிவு செய்யப்பட்டதையடித்து சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் மாலைதீவில் அதிகரித்துள்ளன.
வெளியேற்றப்பட்ட இந்திய இராணுவம்
தெற்கு ஆசியா பகுதியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஏற்கெனவே இலங்கையை சீனா தன் வசம் கொண்டு வந்துவிட்டது. இப்படி இருக்கையில் மாலைதீவு தங்களுடன் நட்புறவை கொண்டாடுவதை சீனா வரவேற்றிருக்கிறது.
எனவே அந்நாட்டின் அதிபருடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதன் விளைவாக, மாலைதீவிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்கிற உத்தரவை முகமது முய்ஜு பிறப்பித்திருக்கிறார்.
ஏற்கெனவே இலங்கை இந்தியாவின் பேச்சை பெரிய அளவுக்கு கேட்பதில்லை. இப்படி இருக்கையில், மாலைதீவும் கையைவிட்டு போய்விட்டால் இந்திய பெருங்கடலில் இந்தியாவின் பலம் குறைந்துவிடும்.
இந்த நிலையில், சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட புதிய அதிபருக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சிகள்
இது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகளான மாலைதீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) மற்றும் ஜனநாயகக் கட்சி சேர்ந்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றன
அதில், "புதிய அதிபர் மாலைதீவின் முதன்மை துறைமுகமாக சீனாவை கருதுகிறார். ஆனால் வரலாற்று ரீதியாக புது டெல்லிதான் நம்முடைய முதன்மை துறைமுகமாக இருந்திருக்கிறது.
எனவே புதிய அதிபரின் நடவடிக்கை, நமது நாட்டை பாரம்பரியத்திலிருந்து விலகி செல்ல வைத்திருக்கிறது. தற்போதைய அரசின் நிலைப்பாடு, இந்தியாவுக்கு எதிரானதாக இருக்கிறது.
இது நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மாலைதீவு நாடாளுமன்றத்தின் மொத்தம் உள்ள 87 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கூட்டாக மேற்குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |