அதலபாதாளத்தில் சுற்றுலாத்துறை! இந்தியாவின் உதவியை நாடும் மாலைதீவு
இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் மாலைதீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு இந்தியா பங்கெடுத்துள்ளது.
அண்டை நாடான மாலைதீவு சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.
இயற்கை அழகு கொட் டிக்கிடக்கும் மாலைதீவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் செல்வார்கள்.
சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தான் அந்த நாடு உள்ளது. ஆனால் சமீபத்தில் மாலைதீவு அதிபராக சீன ஆதரவாளரான முகமது முஸ்சு பதவி ஏற்ற பிறகு இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.
மோடியின் கச்சதீவு பயணம்
மாலைதீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். மேலும் பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் லட்சத்தீவு சென்றிருந்த போது அவரது பயணத்தை மாலைதீவு அமைச்சர்கள் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்த பிரச்சினைக்கு பிறகு மாலைதீவு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
கடந்த ஆண்டு மாலைதீவுக்கு மொத்தம் 17 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றனர். இதில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 198 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யா மற்றும் சீனர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் இந்தியர்கள் வருகை தற் போது குறைந்துள்ளதால் தற்போது 5 - வது இடத் துக்கு சென்று விட்டது. இதனால் மாலைதீவு அரசு கவலை அடைந்துள்ளது.
இந்திய நகரங்களில் நிகழ்ச்சி
இதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க மாலைதீவை சேர்ந்த சுற்றுலா அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் வாகனங்களில் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாலைதீவு சுற்றுலா குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் பயணங்களை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் இடம் பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மாலைதீவு தலைநகர் மாலேவில் இந்திய அதிகாரி முனு மஹாவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இந்தியர்கள் வருகையை அதிகரிக்க எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |