வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்ப்பு- விமல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை
Colombo
Wimal Weerawansa
Sri Lanka Magistrate Court
By Sumithiran
குற்றப்பத்திரிகை தாக்கல்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (17) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமைச்சராக இருந்த போது தனது சம்பளம் மற்றும் இதர வருமானங்களால் சம்பாதிக்க முடியாத 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம்
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களம் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது,
அதன்படி, வழக்கு விசாரணை வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

