சென்னையிலிருந்து புறப்பட தயாரான இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கோவா செல்லத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இந்தத் தகவலையடுத்து விமானம் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதில் இருந்த 176 பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு நிபுணர்கள்
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டு அச்சுறுத்தல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்துப் பாதுகாப்புப் பணிகளும் முடிக்கப்பட்டு தாமதத்திற்குப் பிறகு இரவு 10 மணியளவில் அந்த விமானம் கோவாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
அச்சுறுத்தல் விடுத்தவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |