அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள்

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Selvam Adaikalanathan Indo Sri Lanka Accord Tilvin silva
By Sathangani Dec 02, 2024 11:12 AM GMT
Report

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் (Mannar) உள்ள அலுவலகத்தில் இன்று (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியல் சாசனத்திலே 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

அநுர அரசில் மாகாண சபை முறைக்கு முடிவு : ரில்வின் சில்வா பகிரங்கம்

அநுர அரசில் மாகாண சபை முறைக்கு முடிவு : ரில்வின் சில்வா பகிரங்கம்

இந்திய - இலங்கை ஒப்பந்தம்

இதன் நோக்கம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயற்பாடாக அமையும். ஒரு அரசியல் சாசனம் வருகின்ற போது, தமிழ் தரப்பின் ஆலோசனையையும் பெற்று அதன் பின்னர் அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும்.

அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Indo Sri Lanka Accord Should Not Be Terminated

எங்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு தருகின்ற வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.

அண்மைக்காலங்களில் ஜனாதிபதி 13ஆவது திருத்தச் சட்டம் சம்மந்தமாக, மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் ஜே.வி.பியின் முக்கிய செய்தியாக 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கின்ற நிலை இருக்கிறது என்பதை தெட்டத் தெளிவாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலே எமது பார்வை என்னவென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள ஒப்பந்தத்தை மீறுகின்ற வகையில் இந்தியாவை ஓரங்கட்டுகின்ற வகையில் அல்லது இந்தியாவின் ஒப்பந்தத்தை இல்லாது செய்கிற நிலை இருக்கிறதா? என்பதனை ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

எனவே அரசியல் சாசனம் எழுதப்படுகின்ற போது தமிழ் தரப்புக்களையும், தமிழ் தரப்புக்களின் ஆலோசனைகளையும் பெற்று புதிய அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.

மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு - அநுர அரசு பதிலடி

மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு - அநுர அரசு பதிலடி

புதிய அரசியல் சாசனம்

13ஆவது திருத்தச் சட்டத்தை அதாவது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது. அதனை நிறைவேற்ற வேண்டும்.

அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Indo Sri Lanka Accord Should Not Be Terminated

இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை இந்தியாவிற்கும் இடையில் அழிக்க முடியாத ஒப்பந்தமாக காணப்படுகின்றது. எனவே புதிய அரசியல் சாசனத்தை எழுதி அதனை இல்லாது ஒழிக்கும் சூழலை தற்போதைய புதிய அரசாங்கம், ஜனாதிபதி செய்ய கூடாது.

பாரிய அளவிலான மக்கள் அவரை நம்பி வாக்களித்து உள்ளனர். தமிழ் மக்களும் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எனவே தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கின்ற வகையிலே புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.

அதே போல் இலங்கை இந்திய - ஒப்பந்தத்தின் 13ஆவது திருத்தச் சட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.“ என தெரிவித்தார்.

அநுர அரசிடம் கையளிக்கப்பட்ட சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம்

அநுர அரசிடம் கையளிக்கப்பட்ட சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம்

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார்

இதேவேளை மன்னார் மாவட்ட மக்கள் அதிக அளவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் சிறந்த முறையில் பணி செய்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Indo Sri Lanka Accord Should Not Be Terminated

மேலும் விவசாய செய்கையும் பாரிய அளவில் அழிவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மழை வெள்ளத்தினால் அரச உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை புறம் தள்ளாது மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை போன்று பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.“ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக அனுராத ஜயரத்ன

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக அனுராத ஜயரத்ன

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!c


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023