இலங்கை ஆட்சி மாற்றத்தில் இந்திய- மேற்குலக புலனாய்வு பிரிவுகளின் கரங்கள்
பாரிய மக்கள் புரட்சி
இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பாரிய மக்கள் புரட்சியின் மூலம் ஆட்சியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் விரட்டியடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
நாட்டையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்த கொடிய ஆட்சியாளன் விரட்டியடிக்கப்பட்டது இலங்கை மக்கள் முதற்கொண்டு சர்வதேசங்களில் வாழ்கின்ற மக்கள் அனைவரினதும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், கோட்டாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் வேறு தேசங்களினது புலனாய்வுப் பிரிவின் கரங்கள் இருந்ததா என்கின்ற கோணத்திலும் நாம் பார்வையைச் செலுத்தவேண்டியது அவசியமாகின்றது.
கோட்டாபாயவை வெளியேற்றுவதற்காக நடைபெற்ற ஆர்பாட்டங்களின் காட்சிகள், திடீர் திடீரென்று களத்தில் ஏற்பட்ட காட்சி மாற்றங்கள்- போன்றனவற்றை அடிப்படையாகவைத்து வேறொரு கோணத்தில் இருந்து தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்