இந்தோனேசியாவில் தீக்கிரையான முதியோர் இல்லம்: பரிதாபமாக 16 பேர் பலி - 15 பேர் படுகாயம்
இந்தோனேசியாவில் முதியோர் இல்லம் ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 16 முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் செயற்பட்டு வந்த முதியோர் இல்லமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
தீயணைப்பு படையினர்
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து ஆறு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ அணைத்த நிலையில், 16 பேர் உயிரிழந்திருப்பதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உறங்கிக் கொண்டிருந்த போது தீப்பற்றியதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் முதியோர் இல்லத்தில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவியாக இருந்துள்ளனர்.
மேலும், மின்சார கசிவு காரணமாக தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் முழுமையான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |