கொழும்புத்துறைமுகத்திற்கு வந்துள்ள வெளிநாட்டு போர்க்கப்பல்
இந்தோனேசிய(indonesia) கடற்படையின் போர்க்கப்பலான ‘KRI BUNG TOMO - 357’ நேற்று (பெப்ரவரி 16, 2025) நல்லெண்ண விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை(port of colombo) வந்தடைந்தது, மேலும் கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையால்(sri lanka navy) வரவேற்கப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல் 95 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 111 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
கொழும்பு பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வை
இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் (N) டெடி குணவன் வித்யாத்மோகோ ஆவார். மேலும், இந்தப் போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறும் கப்பல்
மேலும் நல்லெண்ண வருகையைத் தொடர்ந்து, 'KRI BUNG TOMO - 357' என்ற கப்பல் இன்று நாட்டை விட்டுப் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 3 மணி நேரம் முன்
