வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Vanan
இலங்கையில் தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட விரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குறித்த முயற்சிகளில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தேவையான வசதிகள் மாகாண சபை, பிரதேச சபை மூலம் செய்து கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடு இன்று எதிர்நோக்கியுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் டொலரினை இலங்கைக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி