படு மோசமான நிலையில் இலங்கை- சிம்பாப்வேக்கு அடுத்த இடத்தில் தரப்படுத்தல் (விபரம் உள்ளே)
அண்மைக்காலமாகவே ஒப்பீட்டளவில் இலங்கையில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக சர்வதேசப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க்(Steve Hanke) சுட்டிக்காட்டியுள்ளார்.
பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கின் கூற்றுப்படி, உலகிலேயே அதிக வருடாந்த பணவீக்க விகிதத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
அவர் அமெரிக்காவில் உள்ள ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார், ஹான்கி பணவீக்க குறியீட்டை வழி நடத்துகிறார்.
அறிக்கையின்படி, சிம்பாப்வே மட்டுமே இலங்கையை விட அதிக பணவீக்கத்தைக் கொண்ட முதலாவது நாடாக உள்ளது.
இலங்கைப் பொருளாதாரம் ஆழமான படுகுழிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், பணவீக்கத்தின் மோசமான சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, மறைமுகப் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்த மத்திய வங்கி உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் ஸ்டீவ் ஹாங்க் (Steve Hanke) தெரிவித்துள்ளார்.