வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு வெளியான தகவல்
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கையிலிருந்து வெளியேறுபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்துக் கொள்வதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் ஆவணங்களை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானதாகும். இந்த செயற்பாடுகளோடு தொடர்புபட்ட ஏனைய பிரிவினரையும் இணைத்துக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் மோசடிகள்
ஆவணங்கள் உறுதிப்படுத்தப்படாத காரணத்தால் போலி ஆவணங்கள் மூலம் பல மோசடிகள் இடம்பெறுகின்றமை தெரிய வந்துள்ளது.
இதனை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
வெளிநாடுகளிலுள் கொன்சியூலர் காரியாலயங்கள், தூதுவர் காரியாலயங்கள் ஊடாகவும் இந்த செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி