இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் - ஒருவர் கைது
Srilanka
Arrested
Drug
Valaichchenai
Military Intelligence
OPIUM
By MKkamshan
வாழைச்சேனையில் ஓபியம் (OPIUM) அபின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 460 கிராம் ஓபியம் (OPIUM) அபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதனை கடத்திச்செல்லப் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த போதை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

