கோட்டாபய வெளியிட்ட தகவல்
srilanka
gotabaya
corona vaccine
By Sumithiran
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 10 இலட்சம் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கவுள்ள இந்த தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கிடையில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் வரும் நாட்களில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இரண்டாம் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி போடப்படவுள்ள 600,000 கொழும்பு பகுதியில் உள்ள மக்களுக்கு அவற்றை விநியோகிக்கவும், பின்னர் கேகாலை பகுதி மக்களுக்கு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் ஃபைசர் தடுப்பூசி வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி