கொரோனா தொற்று தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை14,720 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று மேலும் 538 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொரோனா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 578,262 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 341 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 546,839 ஆக அதிகரித்துள்ளது.
