சஜித்தின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்(Sajith Premadasa) சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவினால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விசாரணைகளுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம்(Mahinda Yapa Abeywardena) எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சஜித் பிரேமதாசர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் நிலையில் சபாநாயகருக்கு சமர்ப்பித்த சொத்து விபரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் ஒன்றை வழங்குமாறு சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |