காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்த விசாரணை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Missing Persons Sri Lankan Tamils
By Farook Sihan Oct 16, 2026 09:53 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தங்களது மூல ஆவணங்களை எவரிடமும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அலுவலகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று காலை அழைக்கப்பட்ட நிலையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, பல தசாப்தங்களாகத் தமது உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் துயரங்களும், OMP அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றமும் வெளிப்படுத்தப்பட்டன.

பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியம்! ஷிரந்தி தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியம்! ஷிரந்தி தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட விடயங்கள்

“1990ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் திகதி வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர் அதன் பின்னர் திரும்பி வரவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்த விசாரணை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Inquiry Into The Issue Of Enforced Disappearances

அவர் கிடைக்கும் வரை நாங்களும் பல இடங்களிலும் தேடித் திரிகிறோம். எந்தவொரு முடிவும் இல்லாமல் 36 வருடங்களாக எனது கணவரைக் காணவில்லை” எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, தமது அலுவலகத்திடம் சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியல் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட விடயங்களைச் சரிபார்த்த பின்னர், தற்போது சுமார் 17,000 பேரின் தரவுகள் அலுவலகத்திடம் உள்ளதாகவும், இவர்களில் ஏறத்தாழ 11,000 பேருக்கு இதுவரை முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு

கடுமையாக எச்சரிகை

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபா வழங்கப்படுவதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்த விசாரணை! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Inquiry Into The Issue Of Enforced Disappearances

இதற்கிடையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் OMP வெளியிட்டுள்ள அறிக்கையில், அலுவலகத்தின் பணிகளுக்காகப் பிறப்புச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகள் மட்டுமே சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016