கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்
Port of Colombo
Sri Lanka Navy
By Sumithiran
இந்திய கடற்படைக்கு சொந்தமான (INS) ‘ஐராவத்’என்ற கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
வருகை தந்த கப்பலை சிறிலங்கா கடற்படையினர் கடற்படையின் மரபிற்கு அமைவாக வரவேற்றனர்.
170 பேர் கொண்ட பணியாளர்களை
INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள, தரையிறங்கும் கப்பல் (LST – L) 170 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்டதாகவும், கொமாண்டர் ரிந்து பாபு தலைமையில் வந்துள்ளதாகவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவைச் சந்தித்துள்ளார்.
சுற்றுலாத் தலங்களை பார்வை
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடுவார்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்