ஐஎன்எஸ் விக்கிராந்த்! வல்லரசுகளை மிரள வைத்த இந்தியாவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்

Narendra Modi India Indian Army INS Vikrant
By Kiruththikan Sep 02, 2022 11:43 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இந்தியா
Report

விக்ராந்த்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு கையளித்துள்ளார்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வைத்து பிரதமர் மோடியால் இந்த கப்பல் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கடற்படை கொடியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டு புதிய வெள்ளைக் கொடியில், தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

1950-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடற்படை கொடியில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதி நவீன தானியங்கி அம்சங்கள் -  ஐஎன்எஸ் விக்ராந்த்

ஐஎன்எஸ் விக்கிராந்த்! வல்லரசுகளை மிரள வைத்த இந்தியாவின் பிரம்மாண்ட போர்க்கப்பல் | Ins Vikrant Indias First Largest Indigenous Ship

இந்திய வரலாற்றில் அதி நவீன தானியங்கி அம்சங்களைக் கொண்டு 20,000 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.

இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற அரசாங்கத்துக்கு உந்து சக்தியா விளங்குவது, எடுத்துக்காட்டாக இருப்பது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் அல்ல, மிகப்பெரிய ராட்சத உருவம் கொண்டது. தனித்துவமானது, சிறப்பானது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று சேர்ந்துள்ளது.

இந்தியாவின் புதிய நம்பிக்கையை நிரப்பியுள்ளது, நாட்டுக்கு புதிய நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது.

சிறப்பான, வலிமையான உள்நாட்டு தயாரிப்பு - ஐஎன்எஸ் விக்ராந்த்

ஐஎன்எஸ் விக்கிராந்த்! வல்லரசுகளை மிரள வைத்த இந்தியாவின் பிரம்மாண்ட போர்க்கப்பல் | Ins Vikrant Indias First Largest Indigenous Ship

விகாராந்த் கப்பலின் ஒவ்வொரு பாகமும் சிறப்பானது, வலிமையானது, உள்நாட்டு தயாரிப்பில் உருவானது. உள்நாட்டு படைப்பின் அடையாளம், உள்நாட்டு வளங்கள், திறமைகள், திறன்களின் கூட்டு.

கப்பலில் பயன்படுத்தப்பட்ட உருக்குப் பொருட்கள் உள்நாட்டைச் சேர்ந்தவை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது இந்தியாவின் 2-வது விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும். ஏற்கனவே இந்தியாவிடம் உள்ள விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டதாகும்.

தற்போது உலகில் ஐந்து அல்லது ஆறு நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி கப்பலைத் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளன. தற்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

உள்நாட்டில் விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து உருவாக்குவதற்கான முக்கிய திறனை இந்தியா கொண்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவை இயக்கும் திறன்

ஐஎன்எஸ் விக்கிராந்த்! வல்லரசுகளை மிரள வைத்த இந்தியாவின் பிரம்மாண்ட போர்க்கப்பல் | Ins Vikrant Indias First Largest Indigenous Ship

இந்தியாவின் முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த போர்க்கப்பல் கட்டப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் உள் நிறுவனம் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது.

262 மீட்டர் நீளம் மற்றும் 62 மீட்டர் அகலம் கொண்ட விக்ராந்த் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பின்னர் 43000 டன் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

28 நாடிகள் வேகத்தில், 7500 கடல் மைல்கள் தூரம் செல்லக் கூடியது. இது சுமார் 2,200 பெட்டிகளைக் கொண்டுள்ளது, சுமார் 1,600 பணியாளர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்கள் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் தங்குவதற்கு சிறப்பு அறைகள் உள்ளன.

பிசியோதெரபி கிளினிக், ஐசியூ, ஆய்வகங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உள்ளிட்ட சமீபத்திய உபகரணங்களுடன் கூடிய முழு அளவிலான மருத்துவ வளாகத்தையும் கப்பல் கொண்டுள்ளது.

இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக உலங்குவானுர்திகள் , இலகுரக போர் விமானங்கள், தவிர MiG-29K போர் விமானங்கள், Kamov-31 மற்றும் MH-60R மல்டி-ரோல் உலங்குவானுர்திகளை உள்ளடக்கிய 30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களை விட சுமார் 7 மடங்கு பெரியதாகும்.

கப்பலில் உள்ள நான்கு என்ஜின்களும் சேர்ந்து 88 மெகாவாட் சக்தியை உருவாக்குகின்றன. அது ஒரு நகரத்திற்கே மின்சாரம் வழங்க போதுமானதாகும்.

23 ஆயிரம் கோடி ரூபாய் செலவு

ஐஎன்எஸ் விக்கிராந்த்! வல்லரசுகளை மிரள வைத்த இந்தியாவின் பிரம்மாண்ட போர்க்கப்பல் | Ins Vikrant Indias First Largest Indigenous Ship

சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்த போர்க்கப்பல் உருவாகி உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 நாட்களுக்கு நடைபெற்றது.

பின்னா் கடந்த அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன.

பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டாலும், அடுத்த ஆண்டு இறுதியில் தான் இது முழுமையாக இயக்கத்திற்கு வரும்.

உள்நாட்டிலேயே போர்க்கப்பல் தயாரிப்பதற்கான சாத்தியத்தை நிஜமாக்கியதன் மூலம் ’ஐஎன்எஸ் விக்கிராந்த்’ இந்திய கடற்படையில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகின்றது.

விக்ராந்த் என்றால் வெற்றி மற்றும் வீரம். அவ்வாறான ஒரு நிலையைக் கொண்டு இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025