உலகின் மிக உயரமான கட்டடத்தில் இலங்கையின் தேசியக் கொடி
srilanka
people
By Vasanth
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள “புர்ஜ் கலீபா” உலகின் மிக உயரமான கட்டடம் ஆகும்.
கொரோனா பாதிப்பினால் ஒரு வேளை உணவிற்கே அல்லல்படக்கூடிய 1.2 மில்லியன் மக்களுக்கு உணவளித்து இந்த புர்ஜ் கலீபா கருணையின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறது புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
உலகின் மிக உயரமான குறித்த கட்டடத்தில் இன்று இலங்கையின் தேசியக்கொடி காட்சிப்படுத்தப்பட்டது.
2021ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று இலங்கைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்த வகையில் கட்டடத்தில் இலங்கைக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது.


