உலகளவில் பல பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழப்பு!
Instagram
World
By Pakirathan
உலகளவில் பல பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, 46,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொள்வதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
டௌண்டெக்டர் எனப்படும் (Downdetector.com) செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளத்தினை அடிப்படையாகக்கொண்டு வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முறைப்பாடுகள்
பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கூடுதலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறித்த தளத்தில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த விடயம் தொடர்பில் மெட்டா எவ்விதமான உத்தயோகபூர்வமான தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்