தானியங்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவிக்கையில்,
''பூச்சிகளால் தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கும் வகையில், சட்டவிரோத வியாபாரிகள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இரசாயனங்களை சேர்க்கின்றனர்.
இரசாயனங்கள் கலந்த தானியங்கள்
சந்தையில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான தானியங்கள் அரசாங்கத்தின் சுகாதார பரிசோதகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் உள்ள நச்சு இரசாயனங்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நச்சு இரசாயனங்கள் கலந்து விற்கப்படும் தானியங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.
இந்த நிலையில் சந்தையில் இருந்து தகுதியற்ற உணவுகளை அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்'' எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |