பூநகரியில் வாகனத்திற்குள் இருந்த அரச அதிகாரியின் அடாவடி!
இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறை இராணுவமயமாக்கப்பட்ட, நிர்வாகரீதியில் மத்தியமயப்படுத்தப்பட்டதாக இன்றும் வடக்கில் காணப்பட்டு வருகின்றது.
பாதுகாப்புமயமாக்கலும் பாதைத்தொடர்பும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியமர்வு மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றின் முன்னுரிமைகள் இன்றும் பின்நோக்கியே காணப்படுகின்றன.
குறிப்பாக வடக்கை பொருத்தவரையில் பாதைத்தொடர்புக்கான ஏறக்குறைய முழு முதலீடும் A9 மற்றும் சில பிரதான வீதிகளின் மீள்விருத்திக்கே சென்றடைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் வடக்கு வாழ் மக்களின் வீதி உள்ளக மற்றும் பிரதான போக்குவரத்து வீதிகள் பல இன்றும் அபிவிருத்தியடையாமலே காணப்படுகின்றன.
இவை உள்ளூர் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றன. மேலும் வடக்கு மாகாணத்தில் மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை இயலுமைப்படுத்துவதற்கு பெரும் சவாலாகியுள்ளன.
இவ்வாறான ஒரு பிரச்சினையை சந்தித்திருக்கும் கிளிநொச்சி - பூநகரி மக்களின் வீதி அபிவிருத்தி கோரிக்கையும் அதற்கு எவ்வாறான பதில்களை அரசியல்வாதிகள் வழங்கியுள்ளனர் என்பதையும் தொடரும் காணொளி விளக்கப்படுத்துகிறது...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
