லண்டனிலிருந்து இரகசியமாக கடத்திச் செல்லப்பட்ட முக்கிய உளவாளி
கனடாவில் வைத்து புலம்பெயர் சீக்கிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இராஜதந்திர இழுபறிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் உளவு அமைப்புக்களின் தேசங்கள் கடந்த செயற்பாடு தொடர்பாகவும் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
ஒரு தேசத்தின் அரசுக்கு எதிராக போர்fகொடி தூக்கி வருகின்ற அமைப்புக்கள், இனங்கள் வேறு தேசங்களில் தங்கியபடி போராடி வருகின்ற தருணங்களில், அந்த தேசத்தின் புலனாய்வுப் பிரிவுகள் எப்படி அந்த நபர்களை கையாளுவார்கள் என்பது - புலம்பெயர்ந்து நிற்கும் ஒவ்வொரு இனமும் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான விடயம்.
புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக நின்றபடி தமது விடுதலைக்காக குரல் கொடுத்து வரும் நபர்களை புலனாய்வுப் பிரிவுகள் எப்படி குறி வைக்கும் என்பதற்கு உலகம் முழுவதும் நடைபெற்ற ஏராளமான சம்பவங்கள் உதாரணங்களாக கொட்டிக் கிடக்கின்றன.
அந்த வகையில், புலம்பெயர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை லண்டனில் இருந்து அவரது சொந்த தேசத்திற்கு எவ்வாறு கடத்திச் சென்றார்கள் என்கின்ற ஒரு counter intelligence operation பற்றித் தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் சற்று விரிவாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
ஒபரேஷன் ட்ரஸ்ட் எனும் படையை நடவடிக்கையை ஆதரவாகக் கொண்டு புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை பல்வேறு புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டிருந்தார்கள் என்கின்ற அடிப்படையில், ஒபரேஷன் ட்ரஸ்ட் என்ற படை நடவடிக்கை பற்றிய சரிதான புரிதலை தமிழ் மக்களும் கொண்டிருப்பது மிக மிக அவசியம்.
