தயாசிறியின் கட்சி உறுப்புரிமை விவகாரம் : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் (Dayasiri Jayasekara) கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவதற்கான சிறிலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (17) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த முறைப்பாடை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் பொதுச் செயலாளர்
ஆனால் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் செயற்படுவதில் தலையிடுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தடையின்றி செயற்பட இடமளிக்குமாறு கட்சிக்கு உத்தரவிடுமாறு தெரிவித்து தயாசிறி ஜயசேகரவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை இன்று (17) அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |