சலேவுக்கு எதிராக கர்தினால் எடுத்த நடவடிக்கை! முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைத் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவுக்கு எதிராக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தினால் இடைபுகு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சலேவின் குறித்த மனுவால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனு மீதான பரிசீலனை
இந்த மனுவானது, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |