ரில்வின் சில்வாவின் எதேச்சதிகாரம்: தேசிய மக்கள் சக்திக்குள் உள் முரண்பாடு தீவிரம்
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்குள் அண்மைக்காலமாக உள்ளக முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எதேச்சாதிகார போக்கு, அமைச்சர்களின் பணிகளில் குறுக்கீடு என்பவற்றின் காரணமாக ஜே.வி.பி. அல்லாத தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஆலோசனை
அவ்வாறு அதிருப்தி கொண்ட தரப்பின் ஒரு குழுவினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஆலோசனைகள் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிருப்தியாளர் குழுவுக்குத் தலைமை
தற்போதைய நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் அதிருப்தியாளர் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதேவேளை அவருடன் சுமார் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , பிராந்திய அரசியல்வாதிகள் சிலரும் இணைந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 3 மணி நேரம் முன்