யாழிலுள்ள பழமையான வைத்தியசாலைக்கு சர்வதேச விருது!
இலங்கையில் கருவள சிகிச்சையை சிறந்த முறையில் முன்னெடுக்கும் வைத்தியசாலையாக இணுவில் மக்லியோட் வைத்தியசாலை (Inuvil-Mcleod-Hospital) தெரிவு செய்யப்பட்டு அதற்கு சர்வதேச விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விருது “BWIO” என்ற அமெரிக்காவினை சேர்ந்த அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் (Taj Samudra, Colombo) இடம்பெற்றுள்ளது.
சர்வதேச விருது
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கருவள சிகிச்சையினை (IVF) சிறந்த முறையில் முன்னெடுக்கும் வைத்தியசாலையாக குறித்த வைத்தியசாலை 10 சர்வதேச நாடுகளினால் தெரிவு செய்யப்பட்டு இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சர்வதேச நாடுகளின் பிரநிதிகள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பழமையான வைத்தியசாலை
குறித்த வைத்தியசாலை 126 வருடம் பழமை வாய்ந்த வைத்தியசாலையாக காணப்படுகிறது.
தற்பொழுது மக்லியோட் வைத்தியசாலையை குழந்தை சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் பா.சயந்தனால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




