நுவரெலியாவில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lankan Peoples
By Dilakshan
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் நுவரெலியாவில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(27) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நுவரெலியா பிரதேசத்தில் தனது காதலியுடன் இருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கை
அதன் போது, கஹனவிடகே டொன் நந்தசேன என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சில காலம் தலைமறைவாக இருந்த சந்தேக நபர் இலங்கைக்கு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 09 கிலோ ஐஸ் போதைப்பொருளை சந்தேக நபர் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்