செம்மணியில் களமிறங்கும் சர்வதேச நிபுணர்கள்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம், அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் புதைகுழியில், இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன,
இலங்கை அரசு இதற்கு முன் விசாரணைகளை நிறுத்தியிருந்தாலும், செயற்கைக்கோள் படங்கள் புதிய புதைகுழிகளை உறுதிப்படுத்தியுள்ளன.
இனப்படுகொலை குற்றவாளிகளால் தங்கள் குற்றங்களை விசாரிக்க முடியாது எனவும், சர்வதேச தலையீடு அவசியம் எனவும் சில சர்வதேச அரசியல் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் தலைமையிலான விசாரணையை வலியுறுத்தி கோரிக்கைகள் வலுக்கும் நிலையில் அதன் உண்மைதன்மைகள் குறித்து விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் அதிர்வு....
