சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பை ஏற்ற சர்வதேச நாணய நிதியம்! கொழும்பு விரையும் பிரதிநிதிகள்
srilanka
basil
colombo
International Monetary Fund
gotaba
By S P Thas
சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இருவர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்திக்க உள்ளனர். அதனையடுத்து செவ்வாய்க்கிழமை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றையும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சமர்ப்பிக்க உள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு சென்று கடன் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி