உலகெங்கிலும் கொண்டாடப்படும் சர்வதேச பை தினம்
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 14-ம் திகதி, உலக π(பை) தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1988-ல் லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் குறித்த தினத்தை கொண்டாடியது முதல் இன்று வரை உலகπ(பை) கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் சில மாகாணங்களில் π(பை) தினத்தைக் கொண்டாடுவதற்காக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தோராய மதிப்பான 3.14
எங்கெல்லாம் வட்ட வடிவம் தோன்றுகிறதோ அங்கெல்லாம் π என்கிற மிக முக்கிய எண் தோன்றுகிறது. இயற்கையில் பெரும்பாலான பொருட்கள் வட்ட வடிவத்தில் காணப்படுவதால் இயற்கையோடு பை பின்னிப் பிணைந்துள்ளது.
ஆர்க்கிமிடிஸ் வழங்கிய தோராய மதிப்பான 3.14 என்ற எண்ணையே இன்று நாம் π -யின் மதிப்பாகக் கருதிக்கொள்கிறோம். 3.14 என்ற எண் π -யின் உண்மை மதிப்புக்கு இரண்டு தசம இலக்கங்கள் வரையே சரியாக அமைகிறது.
கணிதத்தில் மிக முக்கியமான எண்ணாக π விளங்குகிறது. அதன் மதிப்பு தோராயமாக 3.14 என வருகிறது.
πயின் பயன்பாடு
அதனால், அமெரிக்க முறையில் திகதியை குறிப்பிடும்போது மார்ச் 14 என்ற திகதி, πயைக் குறிக்கும் திகதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
GPS இடம்(location) முதல், வாகன கண்காணிப்பு முறை, விமானங்களில் உள்ள கண்டுபிடிப்புக்கள் வரை எல்லாவற்றிலும் πயின் பயன்பாடு காணப்படுகிறது.
π என்ற எண்ணைக் கற்காலம் முதல் தற்காலம் வரை மனிதர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே, கணிதத்தில் தோன்றும் எண்களில் அதிக அளவு பயன்படுத்தப்பட்ட எண்ணாக விளங்குகிறது.
மேலும், கன வடிவங்களான கோளம், கூம்பு, உருளை போன்றவற்றின் மேற்பரப்பு, கொள்ளளவு மதிப்புகளில் π காணப்படுகிறது.
தசம இலக்கக் கணக்கீடு
பை என்பது கணிதத்தைத் தாண்டியும் நம் வாழ்வில் சுவாரஸ்யம் சேர்க்கக் கூடியது.
ஒரு கணினி, முறையாக வேலைசெய்கிறதா எனத் தெரிந்துகொள்வதற்கு, π-ன் தசம இலக்கக் கணக்கீடுகள் பயன்படுகின்றன.
மேலும், இலக்கியத்தில் ஆஸ்ட்ரோபிசிஸிஸ்ட் கார்ல் சாகன் தனது நாவலில் வேற்றுக்கிரகவாசிகளின் குறியீட்டை பை என்ற கணிதக் குறியீட்டில் மறைத்துவைப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
