இலங்கைக்கு சர்வதேசம் காட்டியுள்ள சிவப்புக்கொடி :அபாய அறிவிப்பு என்கிறார் பீரிஸ்
G. L. Peiris
Ranil Wickremesinghe
By Sumithiran
அரசியலமைப்பு பேரவையின் விவகாரங்களில் தன்னிச்சையாக தலையிட்டு அரசியலமைப்பை மீறிய காரணத்தின் அடிப்படையில் அதிபர் ரணிலுக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர சந்தர்ப்பம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சபையானது ஜனநாயக நிறுவனங்களின் முதுகெலும்பு என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமுகம் இலங்கைக்கு சிவப்புக் கொடி
நாவலவில் உள்ள சுதந்திர மக்கள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக சர்வதேச சமுகம் இலங்கைக்கு சிவப்புக் கொடி காட்டியுள்ளதாகவும், தேர்தல் காலத்தில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி