பாகிஸ்தானில் இருந்து வெளியான முதல் அறிக்கை! ஹோர்முஸை நோக்கி படையெடுத்த சர்வதேச கப்பல்கள்

Pakistan Iran World Iran-US Conflict
By Dharu Apr 11, 2026 11:58 AM GMT
Report

பாகிஸ்தான் தலைநகரில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருப்பதால், பல கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சர்வதேச கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

MarineTraffic தளத்தினை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்தியில் குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்த கப்பல்களில் பெரும்பாலானவை சீனாவைச் சேர்ந்தவை என்றும் அவை நீரிணையை கடந்துள்ளன எனவும் தரவுகள் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலை விடுத்து அமெரிக்காவுக்கு முன்னுரிமை என கவனம் செலுத்துங்கள் : ஈரான் தலைவர்

இஸ்ரேலை விடுத்து அமெரிக்காவுக்கு முன்னுரிமை என கவனம் செலுத்துங்கள் : ஈரான் தலைவர்

சீன சரக்குக் கப்பல்

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு இறுதியாக ஈராக்கின் உம் காஸ்ர் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஒரு சீன சரக்குக் கப்பல், இரவோடு இரவாக அவ்வழியே கடந்து சென்றது.

பாகிஸ்தானில் இருந்து வெளியான முதல் அறிக்கை! ஹோர்முஸை நோக்கி படையெடுத்த சர்வதேச கப்பல்கள் | International Ships Sailed Towards Hormuz

இந்நிலையில் தற்போது தலா சுமார் 300,000 தொன் கொள்ளளவு கொண்டதும், சரக்குகள் நிரம்பியதாகக் காட்டப்பட்டதுமான இரண்டு சீன கச்சா எண்ணெய் கப்பல்கள் நீரிணையை கடந்து சென்றதாக தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

எனினும் போக்குவரத்து, வழக்கமான அளவை விட ஒரு சிறு பகுதியாகவே உள்ளது என்றும் அதாவது ஒரு நாளைக்கு சுமார் 100 கப்பல்கள் என்ற கணக்கில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அன்று ட்ரம்ப், "ஹோர்முஸ் வழியாக எண்ணெய் செல்ல அனுமதிப்பதில் ஈரான் மிகவும் மோசமான, சிலர் கண்ணியமற்ற ஒரு செயலைச் செய்கிறது" என்று கூறினார்.

நெதன்யாகுவின் வலையில் சிக்கிய ட்ரம்ப் : உண்மையை போட்டுடைத்த அமெரிக்க முன்னாள் செயலாளர்

நெதன்யாகுவின் வலையில் சிக்கிய ட்ரம்ப் : உண்மையை போட்டுடைத்த அமெரிக்க முன்னாள் செயலாளர்

இஸ்லாமாபாத்திலிருந்து அறிக்கை

“அது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல!” என ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

பாகிஸ்தானில் இருந்து வெளியான முதல் அறிக்கை! ஹோர்முஸை நோக்கி படையெடுத்த சர்வதேச கப்பல்கள் | International Ships Sailed Towards Hormuz

இவ்வாறான நிலையில் லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்கள் உட்பட, அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தெஹ்ரான் கூறும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, "ஹோர்முஸ் வழியாக எண்ணெய்க் கப்பல்கள் செல்வதற்கான தற்போதைய நிபந்தனைகளை ஈரான் பராமரித்து வருகிறது" என்று ஈரானின் அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம், இன்று சனிக்கிழமை இஸ்லாமாபாத்திலிருந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், தனது அனுமதியுடன் மட்டுமே கப்பல்கள் ஜலசந்தி வழியாகச் செல்ல முடியும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி