தமிழ் தொழில்முனைவோரின் லண்டன் மாநாட்டின் முதலாம் நாள் அமர்வு நிறைவு (படங்கள்)
இரண்டாம் இணைப்பு
புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பொருளாதார பலம் உலகளாவிய ரீதியில் முக்கியமான ஒரு சக்தியாக மாறியுள்ள நிலையில், அந்த வலுவை ஓரணியில் திரட்டும் நோக்கத்துக்குரிய முன்னெடுப்பு ஒன்று இன்று இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
றைஸ் அல்லது எழுமின் என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த முன்னெடுப்பு தமிழ் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுனர்களின் 3 நாட்களுக்குரிய பூகோள உச்சி மாநாடாக நடத்தப்பட்டு வருகின்றது.
இதன் முதலாம் நாள் அமர்வுகள் இன்று மாலை முடிவடைந்துள்ளன. இரண்டாம் நாள் அமர்வுகள் நாளை காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறைடன் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இடம்பெற்ற முதலாம் நாள் மாநாடு இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றிருந்தன.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா ஆகிய வட அமெரிக்க நாடுகள் இந்தியா, மலேசியா உட்பட நாடுகளில் உள்ள தமிழ் தொழில் முனைவோர் மற்றும் தொழில்வல்லுனர்கள் பலரும் இதில் பங்கெடுத்திருந்தனர்.
இன்றைய முதலாம் நாள் நிகழ்வில் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் தமிழகத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரித்து உலகளாவிய ரீதியில் ஒரு முன்னணி பசுமைச்சங்கிலியை உருவாக்குவது உட்பட்ட சில முக்கியமாக திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
நாளையும் நாளை மறுதினமும் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள், திறனாய்வாளர்கள் மாநாடு கோலாகலமாக ஆரம்பம்
அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் மாநாடு லண்டனில் இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடம்பெற்று வருகின்றது.
லண்டன் , பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் தொழிலதிபர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளின் தமிழ் தொழிலதிபர்கள் கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும்.
புகழ்பெற்ற மனிதர்களை அழைத்து வந்து அவர்களுக்கான அரங்கை அமைப்பதை விட, தமிழ் இனத்தை 21 ஆம் நூற்றாண்டில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போகின்ற முயற்சிகள், அவற்றுக்கான திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
தொடர்புடைய செய்தி - அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு
![Gallery](https://cdn.ibcstack.com/article/8fa7f130-a110-4141-9e39-7f1b7fbab27b/22-6273c93ce3eba.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/51f6e4c1-8b9b-40f4-9b26-1eb55c1bc99f/22-6273c93d16720.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e0c54e00-387d-4404-8186-64c430eae2c2/22-6273c93d46183.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6180e9a1-bc4f-48cc-9f5e-90f104eee576/22-6273c93d7252e.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)