உக்ரைனை சுற்றி ஊடுருவிய ரஷ்யா: பீரங்கித் தாக்குதல்களுடன் முன்னேறும் ரஷ்ய படைகள்!
உக்ரைனின் வடக்கில் பெலாரஸ் மற்றும் தெற்கில் கிரிமியா உட்பட பல இடங்களில் ரஷ்ய இராணுவ வாகனங்கள் நுழைந்துள்ளதாக உக்ரைனிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக உக்ரைன் நாடாளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதம் ஏந்திய பலர் உள்ளே நுழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் கிழக்கில், கார்கிவ், லுஹான்ஸ்க் பகுதியிலும் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் எல்லைப் பகுதியூடாக ரஷ்யா இராணுவ வாகனங்கள் நுழைவைதற்கு முன்பு பீரங்கிகளால் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் கீவ் மற்றும் கார்கிவ் உட்பட பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகளும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உக்ரைனின் முன்னாள் அதிபரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பெட்ரோ போரோஷென்கோ, இன்று ஒரு சோகமான நாள் ஆனால் உக்ரைன் மேலோங்கும் என்று கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 தொடக்கம் 2019 வரை பதவியில் இருந்த போரோஷென்கோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நவீன கால ஹிட்லருடன் ஒப்பிட்டார்.
