தமிழ் மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
Sri Lanka Police
Sri Lankan Tamils
Tamils
By Shadhu Shanker
தமிழ் பேசும் மக்களுக்காக காவல்துறை அவசர உதவிகளைப் பெற காவல்துறை தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,
107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அறிமுகமாகியுள்ள இலக்கம்
அதிபர் ரணிலின் அறிவுறுத்தலின் பேரில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் , வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் காவல்துறையினரின் உதவிகளைப் பெற முடியும் என நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்