மீண்டும் புடினுக்கே ஆட்சி! கருத்து கணிப்பில் வெளியான தகவல்
ரஷ்யாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று(15) தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தல் இன்று மற்றும் நாளை நடைபெறுவதுடன் உக்ரைனுடனான போருக்கு மத்தியில் ரஷ்யா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் நான்கு முறை போட்டி நிலவுவதுடன் அதிபர் புடின் சுயேட்சையாக போட்டியிடும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயக கட்சி மற்றும் புதிய மக்கள் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.
வாக்குச்சாவடிகள்
நாடு முழுவதும் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதிபர் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அத்தோடு ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
வலுவான எதிர்க்கட்சி வேட்பாளர் இல்லாததால் புடின் ஐந்தாவது முறையாக அதிபராக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அத்தோடு மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புடினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புடின் ரஷ்யாவின் அதிபராக சுமார் 20 ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |