நாட்டில் அதிகரிக்கும் வறட்சி : மூவாயிரம் குடும்பங்கள் குடிநீரின்றி அவதி
நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக நீரின் பாவனை வழமையை காட்டிலும் அதிகரித்திருப்பதாகவும் நுகர்வோர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனுஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், கேகாலை மற்றும் குருநாகல் பிரதேசங்களில் மூவாயிரம் குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
அதன்படி, நீரின் பயன்பாடு 15% அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனுஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
நீர் விநியோக அமைப்பு
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"மக்களிடம் நீரின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் நீர் விநியோக அமைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஹட்டன், கம்பலவத்தை, ஊருபொக்க, புஸ்ஸல்லாவ, மற்றும் கொட்டகலை ஆகிய ஆறு நீர் விநியோக அமைப்புகளில் இருந்து தற்போது நுகர்வோரின் தேவைக்காக நீர் திறந்து விடப்படுகிறது." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |