மாதிவெல "பறவைப் பூங்கா"வின் திருத்தப் பணிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆராய்வு
Colombo
SJB
SriLanka
Patali Champika Ranawaka
Sajith Preamadasa
By Chanakyan
சிறி ஜயவர்தனபுரவில் உள்ள மாதிவெல பகுதியில் நிர்மானிக்க உத்தேசித்து வரும் "பறவைப் பூங்கா" தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Preamadasa) இன்று காலை சென்று பார்வையிட்டுள்ளார்.
தொடர்புடைய பறவைப் பூங்கா திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
எனினும், இந்தத் திட்டம் தொடர்பாக பல கடுமையான பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, அத்தகைய பிரச்சினைகளை அவதானிப்பதே எதிர்க்கட்சித் தலைவரின் இவ் விஜயத்தின் நோக்கமாக இருந்தது.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.





