கடந்த கால ஊழல் - மோசடி சம்பவங்கள் : அரசு முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 15 மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (Sri Lanka Youth Foreign Employment) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 3,040 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க (Kosala Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
உள்ளக கணக்காய்வு
இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “சிறப்புப் பிரவுக்கு 3,040 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அன்றாட தீர்வுகளை வழங்கக்கூடிய 1,124 முறைப்பாடுகள் உள்ளன அத்தோடு, உள்ளக கணக்காய்வு செயல்முறையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிறப்பு மோசடி அல்லது ஊழல் நடந்ததா என்பதை கண்டறிய 15 சிறப்பு விசாரணைகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.
அவற்றில் மூன்று தற்போது முறையான உள்ளக தணிக்கைக்கு உட்பட்டுள்ளதுடன் இன்னும் சில வெளியில் ஊடகங்களில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான தகவல்களை எடுத்து வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |