மருத்துவர் ருக்சான் பெல்லானாவிற்கு இறுகுகிறது பிடி : ஆரம்பமானது விசாரணை
கொழும்பு தேசிய மருத்துவமனையின் உதவிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லானா(rukshan bellana), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) குறித்து ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைகள் தொடர்பாக சுகாதார அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, மருத்துவர் ருக்ஷன் பெல்லானா ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சின் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
ருக்ஷன் பெல்லானாவிடம் வாக்குமூலம்
இதற்கிடையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் ருக்ஷன் பெல்லானாவிடம் இருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்கு லண்டனிற்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு அதற்காக அரச பணத்தை செலவழித்தார் எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
ரணில் தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கை
எனினும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறு அவர் தேசிய வைத்தியசாலையில் இருந்த சமயம் மருத்துவமனையின் உதவிப்பணிப்பாளர் ருக்சான் பெல்லானா பல்வேறு சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

