நாமலுக்கு இறுகும் பிடி : வங்கி கணக்குகள் குறித்து விசாரணை
ரக்பி விளம்பரத்திற்காக இந்திய 'கிரிஷ்' நிறுவனத்திடமிருந்து நிதியை பெற்று தவறாகப் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்குடன் தொடர்புடைய வங்கி கணக்குகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வழக்குடன் தொடர்புடையவர் என கூறப்படும் 70 மில்லியன் ரூபாயைப் பெற்ற W.D. நிமல் எச். பெரேராவின் இரண்டு வங்கிக் கணக்குகள் குறித்து விசாரித்து வருவதாக நிதி குற்ற விசாரணை பிரிவு கொழும்பு பிரதான நீதவானிடம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நபர்களால் மில்லியன் கணக்கான தொகை வைப்பு
அத்துடன் வெளிநாட்டு நபர்களால் மேலும் பல மில்லியன் கணக்கான தொகை அவற்றில் வைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வைப்புத்தொகைக்கான தெளிவான விளக்கத்தை நிமல் பெரேரா வழங்கவில்லை.
இந்த நிலையில் விசாரணைக் கோப்பைத் திறந்து வைத்து, சந்தேக நபர்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
