யாழில் முதலீட்டுக்கான பந்தயம்! ராஜதந்திர குதிரைகளும் களத்தில்!
சணம் வாதம் சணம் பித்தம் என்ற நிலைப்பாட்டுப் பிரியரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இப்போது இன்னொரு யூ-வடிவத்திரும்பம் எடுத்துவிட்டார்.
இந்த யூ திருப்பத்தில் அமெரிக்கப்படையினரை கிறின்லாந்துக்கு அனுப்பி அதனைத்தான் பலவந்தமாக பிடிக்கப்போவதில்லையெனவும் அதேபோல தனது கிறின்லாந்து லட்சியங்களை எதிர்த்த ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த சிலநாட்களுக்கு தான் முன்னர் மிரட்டல் விடுத்தது போல வரிகளை விதிக்கப்போவதில்லை என்ற செய்திகள் சுவிஸின் டாவோஸ் நகரில் வைத்து நேற்றுச் சொல்லப்பட்டன.
இவ்வாறான செய்தி எல்லாம் வந்தபின்னர் வெள்ளை மாளிகை நிர்வாகத்தின் இசைவுடனான முடிவுகளை நுட்பமாக எடுக்கும் அமைப்பு என்ற விமர்சனத்துக்குரிய அனைத்து நாணய நிதிய குழு(ஐ.எம்.எப்) இன்று இலங்கையில் களம் இறங்கியுள்ளது.
இலங்கையை கடந்த நவம்பரில் ஊடறுத்து சிதிலப்படுத்திய தித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கைகாக நீண்டகால நோக்கில் எடுக்கப்படவேண்டிய முடிவுகளுக்கான ஆய்வுகளுக்காக இந்த குழு கொழும்பில் இறங்கியுள்ள நிலையில் போருக்குப்பின்னராக வடக்குக்கு வெளிமுதலீடுகளை தேடும் நோக்கில் மேற்குலக ராஜதந்திரிகளும் யாழ்ப்பாணத்தில் நேற்றும் இன்றும் தென்பட்டனர்.
சிறிலங்கா அரசாங்கத்தை பொறுத்தவரை அது நாணய நிதியம் கோரியது போலவே உள்ளுரில் எதிர்ப்புகள் இருந்தாலும் கல்விச்சீர்திருத்தம் உட்பட்ட விடயங்களில் ஆமாம் போடுவதால் இன்று இலங்கையில் இறங்கிய ஐ.எம்.எப் குழுவின் முடிவும் அரசாங்கத்துக்கு சாதகமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கக்கூடிய நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |