22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ்

G. L. Peiris IMF Sri Lanka Economy of Sri Lanka 22nd Amendment
By Sathangani Sep 17, 2026 04:44 AM GMT
Report

அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நேற்று (16) கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 22வது திருத்தம் என்பது அரசாங்கத்தைத் தவிர இந்நாட்டிலுள்ள அனைவரும் கடுமையாக விமர்சித்த ஒரு திருத்தமாகும்.

சர்வதேச உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட நாமலின் இரகசிய மின்னஞ்சல்கள்

சர்வதேச உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட நாமலின் இரகசிய மின்னஞ்சல்கள்

22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு

கடந்த காலத்தில் இத்தகையதொரு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அரசியலமைப்பு திருத்தப்படுவது இது முதன்முறையல்ல, 21 முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த 21 திருத்தங்களின் போதும் இதனைச் செய்யவேண்டாம் என நாட்டில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை உருவானதில்லை.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் சிவில் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் 22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ் | Investments In Sl Affected By The 22Nd Amendment

அதேநேரம் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டு லாே ஏசியா அமைப்பு மிகவும் கடுமையான அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.

என்றாலும் இவை எதனையும் பொருட்படுத்தாமல், மிகவும் பிடிவாதமாகவும் அகந்தையுடனும் யார் எதிர்த்தாலும் இதனைச் செய்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இதுவரை எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்த, நான் உட்பட, அனைவரும் ஜெனீவா மற்றும் நியூயோர்க் என அனைத்து இடங்களிலும் "எமது நாட்டில் தலையிடாதீர்கள்" என்றே கூறி வந்தோம்.

ஏனெனில் எமது நாட்டில் மிகவும் வலுவான சுயாதீன நிறுவனங்கள் உள்ளன. எமது உயர்நீதிமன்றம் சர்வதேச ரீதியில் புகழும் நம்பிக்கையும் பெற்ற நிறுவனமாகும்.

சிரிலிய விவகாரம்... ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு : காவல்துறையின் அறிவிப்பு

சிரிலிய விவகாரம்... ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு : காவல்துறையின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட நடவடிக்கை

எனவே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பு எமது நாட்டிலேயே உள்ளது. எனவே உங்களின் தலையீடு தேவையில்லை எனக் கூறினோம்.

இப்போது அந்த வாதத்தை நம்மால் முன்வைக்க முடியுமா? நேர்மையாக முன்வைக்க முடியுமா? இலங்கை நீதித்துறை முன்னெப்போதுமில்லாதவாறு மிகப்பெரியதொரு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ் | Investments In Sl Affected By The 22Nd Amendment

முதலீடுகள் தொடர்பில் இது மிகவும் முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது.

ஆனால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முதலீடுகள் அவசியம். இந்நாட்டிற்கு முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள், வெளிநாடுகள், சர்வதேச வங்கிகள் கவனிக்கும் மிக முக்கிய காரணி நீதித்துறையின் சுயாதீனத்தன்மையாகும்.

நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நம்பிக்கை இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். அதில் சந்தேகம் எழுந்தால் முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள். நாட்டிற்கு முதலீடுகள் வராது. முதலீடுகள் வராவிட்டால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.

எனவே இந்த 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு எமது நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும்“ என தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்