ரணிலின் இங்கிலாந்து பயணம்: முன்னாள் உயர்ஸ்தானிகரிடம் ஏழு மணி நேர விசாரணை!

CID - Sri Lanka Police Ranil Wickremesinghe Sri Lanka Police Investigation NPP Government
By Kanooshiya Nov 23, 2025 05:50 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் அப்போதைய உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவை உயர்ஸ்தானிகருக்கு வரவழைத்து, ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில், 2023 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபா செலவு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்ற குற்றப் புலனாய்வு அதிகாரிகள் குழு, கடந்த திங்கட்கிழமை (17.11.2025) முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்

நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்

விசாரணை

ஏனெனில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் வோல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் விக்ரமசிங்க கலந்து கொண்டபோது, ​​சரோஜா சிறிசேன இங்கிலாந்தில் உயர்ஸ்தானிகராக பணியாற்றியிருந்தார்.

ரணிலின் இங்கிலாந்து பயணம்: முன்னாள் உயர்ஸ்தானிகரிடம் ஏழு மணி நேர விசாரணை! | Invitation Ranil Wickremesinghe In London A Fake

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உயர்ஸ்தானிகர் பதவியில் இருந்து அவர் விலகிய போதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இன்னும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பிதழை வழங்கியது யார், இந்த அழைப்பு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதா, உயர்ஸ்தானிகராலயம் இராஜதந்திர வழிகளை முறையாகப் பயன்படுத்தியதா, அழைப்பின் நம்பகத்தன்மையை உயர்ஸ்தானிகராலயம் சரிபார்த்ததா, இந்த வருகை ஒரு உத்தியோகபூர்வ வருகையாக மற்றும் ஜனாதிபதி இங்கிலாந்து வந்ததிலிருந்து அவர் புறப்படும் வரை உயர்ஸ்தானிகராலயம் என்ன சேவைகளை வழங்கியது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளில் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 முன்னாள் உயர்ஸ்தானிகரைத் தவிர, அப்போதைய துணை உயர்ஸ்தானிகர் மனோரி மல்லிகாரச்சி மற்றும் பிற அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், குறித்த குழுவினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் விசாரணைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை கடமையில் இருந்த மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்

கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை கடமையில் இருந்த மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்

யாழில் சம்பவம் - சம்பல் போத்தலில் போதைப்பொருள் - மூன்று பேர் கைது

யாழில் சம்பவம் - சம்பல் போத்தலில் போதைப்பொருள் - மூன்று பேர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026